×

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு மேலும் 3 மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில், மர்மம் இருப்பதாக பல தகவல்கள் வெளியாகின. இதனால் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை நியமித்து கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் படி ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா, அவரது உறவினர்கள்,
 

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு மேலும் 3 மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில், மர்மம் இருப்பதாக பல தகவல்கள் வெளியாகின. இதனால் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை நியமித்து கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன் படி ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா, அவரது உறவினர்கள், பணியாளர்கள், மருத்துவமனை டாக்டர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. இருந்தும், அவரது மரணத்தை பற்றிய முழு விவரங்களை சேகரிக்க ஆணையத்துக்கு அவகாசம் தேவைப்பட்டது. அதனால், மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடந்த வாரம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 3 மாதம் கால அவகாசத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த அவகாசம் இன்றோடு முடிந்த நிலையில், தற்போது மீண்டும் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதோடு 9 ஆவது முறையாக அவகாசம் நீடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.