×

சிவகாசியில் வெடி விபத்து- 2 பேர் பலி

 

சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியாகினர்.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பயங்கர வெடி விபத்தால் வானுயரம் புகை சூழ்ந்துள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.