☰
×

பண்ருட்டி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து - 7 பேர் காயம்

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டிகுப்பத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "07.11.2026 தேதி மாலை சுமார் 05.45 மணியளவில் பண்ருட்டி உட்கோட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெய்வேலி மெயின் ரோட்டில் திருமதி. ஆனந்தி என்பவர் வீட்டின் முன்பாக வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்த தகவலின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலிசார் வழக்கு பதிவு செய்து உடனடியாக தீயணைப்புத்துறையினருடன் சம்பவ இடம் சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த முதற்க்கட்ட விசாரணையில் பட்டாசு தயாரிக்கும் உரிமம் வைத்திருக்கும் திருமதி. ஆனந்தி என்பவர் உரிமத்தில் குறிப்பிடப்படாத இடமான தனது வீட்டின் முன்பாக பட்டாசு வைத்திருந்த போது பட்டாசுகள் வெடித்ததில் அதன் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 நபர்களும் மற்றும் அங்கு வந்த 2 நபர்கள் என மொத்தம் 8 நபர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதுசம்மந்தமாக முத்தாண்டிக்குப்பம் போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.