×

நள்ளிரவில் பரபரப்பு..! GEN Z DMK நிர்வாகியை கைது செய்ய முயற்சி..!

 

GEN Z DMK நிர்வாகி வீட்டில் நள்ளிரவில் போலீஸ் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பினை கிளப்பியுள்ளது.முதன்முதலாக இந்நிகழ்ச்சி சென்னையில் நடந்தப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் GEN Z DMK கூட்டம் நடைபெற்று வருகிறது.

இப்படியான நிலையில் Gen Z DMK ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த முக்கிய நிர்வாகியான அன்பானந்தம் என்பவரை நள்ளிரவில் போலீசார் கைது செய்ய முயற்சி செய்துள்ள சம்பவம் பெரியளவில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே போடம்பட்டியில் உள்ள அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவு 12 மணிக்கு மேலாக போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். என்ன புகார். அவர் வீட்டில் இல்லை என குடும்பத்தினர் கூறிய பிறகும் போலீசார் அங்கிருந்து செல்லாமல் இருந்துள்ளனர்.

இது சம்பந்தமான வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், நள்ளிரவில் இவ்வளவு அவசரமாக அன்பானந்தம் என்பவரை தேடுவதற்கான காரணம் என்ன என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

தமிழ்நாடு முழுக்க
GENZ DMK கூட்டங்களை ஒருங்கிணைத்து வரும் நபர்களில் ஒருவரான ‘அன்பாநந்தன் அரியப்பன்’ஐ கைது செய்ய கிருஷ்ணகிரியில் உள்ள அவரது வீட்டை சுற்றி, அவர் இல்லாத போதும் நள்ளிரவு 12 மணிக்கு குவிந்திருக்கிறது தவெகவின் காவல்துறை.

என்ன அராஜகம் @CMOTamilnadu விஜய் சார்? pic.twitter.com/BxI3N4x964

— நிதன் சிற்றரசு (@srinileaks) June 23, 2026