டெல்லியில் பரபரப்பு..!! தமிழக முதல்வர் விஜய் தங்கிய இடத்தில் தீ விபத்து..!!
Jun 11, 2026, 10:33 IST
டெல்லியில் விஜய் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்தின் கேண்டீனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் சேதம் எதுவும் இல்லை என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
நேற்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில்தான் முதல்வர் விஜய் தங்கியிருந்தார். இன்று காலை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க விஜய் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், கேண்டீனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர் விஜய் டெல்லி சென்றுள்ள நிலையில், அங்கிருக்கும் தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தீ விபத்து நிகழ்வதற்கு சற்றுநேரத்திற்கு முன்பு தான் CM விஜய் நிதி ஆயோக் கூட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.