×

17 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிச்சநல்லூரில் தொடங்கிய அகழ்வாய்வு பணிகள்!

 

மத்திய தொழில் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அகழ்வாய்வு பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

உலகின் முதல் முதலில் 1876 ஆம் ஆண்டு அகழ்வாய்வு நடத்தப்பட்ட இடம் ஆதிச்சநல்லூர்.  1903- 1904 ஆண்டு முதல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.   2004 முதல் 2005 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி குழுவினர் இந்த அகழ்வாய்வை மேற்கொண்டனர்.  அப்போது 600 மீட்டர் அளவில் ஆய்வு நடைபெற்றதில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள்,  இரும்பு , வெண்கல  பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில்  17 ஆண்டுகளுக்குப் பிறகு  ஆதிச்சநல்லூரில் மத்திய தொழில் துறை சார்பில் இன்று மீண்டும் அகழ்வு பணிகள் நடைபெற தொடங்கியுள்ளது. இப்பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற எம்பி., கனிமொழி தொடங்கி வைத்தார்.