×

“வெட்கமாக இல்லையா CM sir ?”-  விஜய்க்கு அப்பாவு அதிரடி கேள்வி

 

"#திருவிளையாடல் " சினிமாவில் வருவது போல் மண்டபத்தில் யாரேனும் எழுதித் கொடுத்ததை  சட்டமன்றத்தில் வாசிப்பீர்களா CM sir ? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் #முகஸ்டாலின் அவர்கள் மு.க.ஸ்டாலின்ஆட்சியில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதைப்பொருள், கடத்தல், விற்பனை, பயன்பாடு தற்போது  தவெக ஆட்சி அமைந்து 119  நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடம் 500 மடங்கு அதிகரித்ததோடு பாலியல் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து, மாணவ  சமுதாயமே அழிவுப் பாதையில் சென்று  கொண்டிருக்கும்  #மாற்றத்தை உருவாக்கிவிட்டீர்களே CM sir ?  நேற்று #திருச்சியில்  பள்ளிக்கூடத்திற்கு சென்ற 16 வயது மாணவியை போதை பொருட்கள் பயன்படுத்திய நான்கு  சக மாணவர்கள்  கூட்டுப்பாலியல் செய்த கொடுமை  #வெட்கமாக இல்லையா CM sir ? மேலும் இதுபோல் #தவெக கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை குறிவைத்து போதை பொருட்களை விற்பனை செய்வதும் பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதையும் தடுக்க தவறிவிட்டீர்களே  CM sir ? 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும்   கண்காணித்து மாவட்ட, மாநில உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் #உளவுபிரிவு , #SBCID  மற்றும் பல சிறப்பு பிரிவினர் காவல் நிலையங்களில் நடைபெறும் தவறுகளை மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல்  காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களோடு  இணைந்து  போதை பொருட்கள் விற்பனைக்கு  துணை நிற்பது தான் தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணம் என்று "ஓய்வு பெற்ற  காவல்துறை அதிகாரி" என்னுடைய கவனத்திற்கு சொன்னதை, கவனிக்க தவறிவிட்டீர்களே CM sir ? தவெக ஆட்சி அமைந்த பின் தமிழ்நாட்டில் நடந்துவரும் குற்றச்செயல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அதனை கட்டுப்படுத்தி தமிழக மாணவ, மாணவிகளை பாதுகாக்க வேண்டுமென்று சட்டமன்றத்தில்‌ எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  அவர்கள் எடுத்து வைத்திருக்கின்ற வாதத்திற்கு நாளை பதிலளிக்கும்  முதல்வர் எதிர்வாததில் ஈடுபடாமல்  ஆக்கப்பூர்வமான பதிலும் குற்றங்களை தடுப்பதற்கான வழிகளையும் ஆராய்ந்து தமிழக மாணவ, மாணவிகளை போதை கலாச்சாரத்தில் இருந்து காப்பாற்றுவீர்களா? அல்லது "#திருவிளையாடல் " சினிமாவில் வருவது போல் மண்டபத்தில் யாரேனும் எழுதித் கொடுத்ததை   சட்டமன்றத்தில் வாசிப்பீர்களா CM sir ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.