“வெளிநாட்டில் தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீங்க..”- டிஆர்பி ராஜா
கார் ரேஸ் போகணும்னா சொல்லிட்டு போக வேண்டிதானே..தமிழ்நாட்டை அவமானப்படுத்தாதீங்க என முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, “ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ரீல் விட்டே ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புது புது ரீல் விடுகிறார்கள்.. ரீல் எடுக்க இங்க லொக்கேஷன் பத்தலனு வெளிநாடுலாம் போறாங்க.. ஆனால் தமிழ்நாட்டு மானத்தை வாங்க வேண்டாம். கார் ரேஸ் போகணும்னா சொல்லிட்டு போக வேண்டிதானே..தமிழ்நாட்டை அவமானப்படுத்தாதீங்க. மருத்துவமனை முன்னாடி இப்படியா கூத்தடிப்பது? தமிழர்கள் பெயரை இப்படி பண்ணிட்டீங்களே என UKல் வசிக்கும் தமிழர்கள் கூறுகின்றனர். ரூ.3,000 கோடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் பெயரையே சொல்லாதது ஏன்? தொழில் முதலீடு தொடர்பாக தினம் தினம் ரீல் தவெக அரசு விடுகிறது. உண்மையான தொழில் முதலீடு தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்? திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதலீடுகளை தாங்கள் கொண்டுவந்ததாக தவெக கூறுகிறது” என்றார்.