☰
×

“தவெக அரசின் நிர்வாகக் குறைபாடால் தமிழ்நாட்டில் உற்பத்தி முடங்கியது”- தங்கம் தென்னரசு

 

நாட்டின் பிற மாநிலங்கள் தொடர் தொழில் வளர்ச்சியைக் காணும்போது, தமிழ்நாட்டில் மட்டும் உற்பத்தி முடங்கி, நுகர்வு சுருங்கி வருவது நிர்வாகக் கோளாறின் வெளிப்படையான அடையாளம் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில், “திமுக ஆட்சிக் காலத்தில் நாட்டின் பிற மாநிலங்களை விஞ்சி, இரட்டை இலக்க வளர்ச்சியோடு ஜி.எஸ்.டி வசூலில் சாதனை படைத்த தமிழ்நாட்டின் நிதி நிலைமை, இன்று தொடர்ந்து மூன்று மாதங்களாகக் குறைந்து, -5% வரை சரிவைச் சந்தித்திருப்பது வேதனையளிக்கிறது. நாட்டின் பிற மாநிலங்கள் தொடர் தொழில் வளர்ச்சியைக் காணும்போது, தமிழ்நாட்டில் மட்டும் உற்பத்தி முடங்கி, நுகர்வு சுருங்கி வருவது நிர்வாகக் கோளாறின் வெளிப்படையான அடையாளம். தொழில் முதலீடுகளையும் நிதி மேலாண்மையையும் தொலைநோக்குப் பார்வையோடு கையாண்ட திராவிட மாடல் ஆட்சியின் வழிகாட்டுதல் இன்றி, பொருளாதாரத்தை முடக்கியுள்ள இந்த சீர்கேட்டிற்கு ஆளும் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.