×

“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!”- தங்கம் தென்னரசு

 

மகளிர் விடியல் பயணத்திட்டம் என்ற பெயரில் விடியல் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள போக்குவரத்துத்துறை, மகளிர் விடியல் பயண திட்டத்தின் பெயர் மாற்றப்படவில்லை. புகார் குறித்து துறைரீதியில் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!

மகளிரின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தின் பெயரை மாற்றுவது, மக்கள் நலனுக்கான நிர்வாக நடவடிக்கை அல்ல; அரசியல் அடையாளங்களை அழிக்கும் முயற்சி மட்டுமே. ஒரு திட்டத்தின் வெற்றியை அதன் பெயர்…

— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) July 9, 2026


இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில், “மகளிரின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தின் பெயரை மாற்றுவது, மக்கள் நலனுக்கான நிர்வாக நடவடிக்கை அல்ல; அரசியல் அடையாளங்களை அழிக்கும் முயற்சி மட்டுமே. ஒரு திட்டத்தின் வெற்றியை அதன் பெயர் தீர்மானிக்காது; அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய முன்னேற்றம்தான் தீர்மானிக்கும். பெயர் மாற்றங்களில் செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களிலும், சேவைகளை வலுப்படுத்துவதிலும் செலவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.