“அடிக்க அடிக்க உயர்வோம்.. அன்பில் மகேஷ் சட்ட ரீதியாக சந்திப்பார்"- சேகர்பாபு
Updated: Oct 26, 2026, 20:51 IST
“அடிக்க அடிக்க உயர்வோம்” இதை சட்ட ரீதியாக அவரும் சந்திப்பார், கழகமும் சந்திக்கும் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது குறித்து சேகர்பாபு கருத்து கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, "இதுபோன்ற ஆயிரக்கணக்கான பழிவாங்கும் நடவடிக்கைகளை நாங்கள் சந்தித்து இருக்கிறோம். 40 ஆண்டுகளுக்கு மேலாக இதுபோன்ற அவதூறுகளையும், உண்மைக்கு மாறான வழக்குகளையும் தி.மு.க சந்தித்துள்ளது. இதுபோன்ற அடக்குமுறைகள் வரும்போதுதான் எங்கள் இயக்கம் இன்னும் வீறு கொண்டு வரும். அடிக்க அடிக்க உயர்கின்ற பந்தாக எங்கள் கழகம் மாறும். இதை சட்ட ரீதியாக அவரும் சந்திப்பார், கழகமும் சந்திக்கும்" என்றார்.