“எனக்கு அலர்ஜி, நரம்பு பிரச்சனை, இதய பிரச்சனை உள்ளது” - எ.வ.வேலு
ஜூலை 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கட்டாயம் ஆஜராவேன் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “2016 முதலே சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருகிறேன். மருத்துவ சிகிச்சை பெற்ற அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. சிங்கப்பூர் செல்வதற்கு 17-ம் தேதியே டிக்கெட் புக் செய்து விட்டேன். அலர்ஜி, நியூரோ, இதய பிரச்சனைகள் தனக்கு இருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முன்னரே சிங்கப்பூர் பயணம் திட்டமிடப்பட்டது. நான் ஓடவில்லை, ஒளியவில்லை, பதுங்கவில்லை. திமுக அப்படி வளர்க்கவில்லை. ஜூலை 3-ல் ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் சென்னை திரும்ப 10 நாட்கள் ஆகும் என கூறிவிட்டேன். 12ஆம் தேதிக்கு மேல் எந்த தேதியில் அழைத்தாலும் ஆஜராக தயார் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். ஜூலை 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கட்டாயம் ஆஜராவேன். நீதி என் பக்கத்தில் உள்ளது” என்றார்.