×

#BREAKING ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடந்து முடிந்தநிலையில்,  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம்  1 லட்சத்து  74 வாக்குகளும்,  398 தபால் வாக்குகளும் பதிவான நிலையில், சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 15 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில், 1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார். 

பதிவான ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 192 வாக்குகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 8 ஆயிரத்து 474 வாக்குகளும் பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்றிருந்தார். த.மா.கா வேட்பாளர் யுவராஜைவிட தற்போது 15 ஆயிரம் வாக்குகள் குறைவாக அதிமுக வேட்பாளர் தென்னரசு பெற்றுள்ளார். வெற்றி வித்தியாசத்தைவிட அதிமுக வேட்பாளர் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகள் குறைவாக உள்ளது.ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரத்து 575 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் 43 ஆயிரத்து 981 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக தவிர எஞ்சிய வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.