×

இன்று முதல் எல்லாமே மாறுது..! ரயில்வே அபராதம் முதல் பாஸ்போர்ட் கட்டணம் வரை அதிரடி உயர்வு..!

 

1.ரயில்வேயில் புதிய அபராதம் மற்றும் கட்டுப்பாடுகள்

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்போரைத் தடுக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் இந்திய ரயில்வே புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

  • டிக்கெட் இல்லா பயணம்: உரிய டிக்கெட் இன்றி பயணிப்பவர்களுக்கான குறைந்தபட்ச அபராதம் ரூ.250-லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பெண்கள் பெட்டி: பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் அனுமதியின்றி பயணிக்கும் ஆண் பயணிகளுக்கு ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படும்.
  • தட்கல் டிக்கெட் விதி: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ஆதாருடன் இணைக்கப்பட்ட கணக்குகள் மூலம் மட்டுமே ஆன்லைனில் புக் செய்ய முடியும். மேலும், தட்கல் புக்கிங் தொடங்கும் முதல் 30 நிமிடங்களுக்கு வணிகரீதியான ஏஜென்ட்டுகள் டிக்கெட் புக் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. பாஸ்போர்ட் கட்டணம் அதிரடி உயர்வு

வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. புதிய அறிவிப்பின்படி, 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், அவசரத் தேவைகளுக்கான தட்கல் பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

3. ஆதார் அட்டைதாரர்களுக்கு இலவச சலுகை

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் பயனர்களுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. இன்று (ஜூலை 1) முதல் டிசம்பர் 31, 2026 வரை, அதிகாரப்பூர்வ mAadhaar மொபைல் செயலி மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை (Email ID) புதுப்பித்துக் கொள்ள எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. இதற்காக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.75 கட்டணம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

4. கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்

  • எஸ்பிஐ கார்டு (SBI Card): போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கான (PhonePe SBI Credit Cards) ரிவார்டு பாயிண்ட் திட்டங்களில் சில மாற்றங்களை எஸ்பிஐ கார்டு நிறுவனம் அமல்படுத்துகிறது.
  • எச்டிஎஃப்சி கார்டு (HDFC Card): எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் (Lounge Access) வசதியை இலவசமாகப் பெற, அதற்கு முந்தைய காலாண்டில் குறைந்தபட்சம் ரூ.60,000 செலவு செய்திருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது.

5. வங்கி தயாரிப்புகள் தவறாக விற்பனை செய்யப்பட்டால் இழப்பீடு

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் தவறான தகவல்களைக் கூறி காப்பீடு அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளை விற்பனை செய்வதை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய கட்டமைப்பைக் கொண்டு வருகிறது. இதன் மூலம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது முழு தொகையையும் திரும்பப் பெறவும், இழப்பீடு கோரவும் உரிமை உண்டு.

6. எல்பிஜி சிலிண்டர் விலை மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல்

வழக்கம் போல் மாதத்தின் முதல் நாளான இன்று, எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றங்களை அறிவிக்கலாம்.

மேலும், கடந்த நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கான (ITR-1, ITR-2) கடைசி நாள் ஜூலை 31, 2026 என்பதால், வரி செலுத்துவோர் இந்த மாதத்திற்குள் தங்களது ஐடிஆர்-ஐ தாக்கல் செய்யத் திட்டமிட வேண்டும்