×

"டெல்லியில் இருந்து வந்தாலும், சேலத்தில் இருந்து வந்தாலும் பருப்பு வேகாது!" - அதிமுக, பாஜகவை சாடிய செந்தில் பாலாஜி..!

 

முன்னாள் அமைச்சரும் திமுக-வின் கோவை மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மேட்டுப்பாளையம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய தேர்தல் பணிமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து புதிய தேர்தல் அலுவலகத்தில் திரண்டிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் செந்தில் பாலாஜி பேசினார். இந்த நிலையில்தான், அதிமுக, பாஜகவின் பருப்பு தமிழகத்தில் வேகாது என கூறினார். 

அவர் பேசியதாவது, "ஒரு தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்து வந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் எவ்வளவு. பாஜக வோடு கூட்டணியில் இருந்த போது எவ்வளவு வாக்குகள் பெற்றார்கள். இருவரும் தனித்தனியே போட்டியிட்ட போது இருவரும் பெற்ற வாக்குகள் எவ்வளவு என அறிந்து அதனை கூட்டி பார்த்து நாம் வெற்றி பெற எவ்வளவு வாக்குகள் தேவை என்பதையறிந்து திமுக வினர் பணியாற்ற வேண்டும். 

திமுகவினர் அடித்து ஆட வேண்டும். நமக்கு தடுப்பு ஆட்டம் தேவையில்லை. முதல் அடி நமது அடியாக இருக்க வேண்டும். நமது அரசின் சாதனை திட்டங்களை வீடு வீடாக சென்று கொண்டு செல்ல வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் நாம் வெல்ல வேண்டும். 

டெல்லியில் இருந்து வந்தாலும், குஜராத்தில் இருந்து வந்தாலும், சேலத்தில் இருந்து வந்தாலும் இவர்கள் பருப்பு இங்கு வேகாது, நம்ம தான் வெற்றி பெறுவோம். நாம் மட்டும்தான் வெற்றி பெறுவோம்" என பேசினார்..

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் ரவி, கூடலூர் திமுக நகர செயலாளர் அறிவரசு, முன்னாள் எம்.எல்.ஏ க்கள் அருண்குமார், சி.ஆர்.ராமச்சந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முக சுந்திரம் உள்ளிட்ட ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.