×

வெளியான கருத்துக்கணிப்பு! இன்று தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணிக்கே வெற்றி

 

இன்று மக்களவைத் தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணிக்கே வெற்றி என India Today, CVoter கணிப்பில் தெரியவந்துள்ளது.


தமிழ்நாட்டில் இன்று மக்களவைத் தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என INDIA Today, CVoter நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 45 சதவீத வாக்குகளுடன் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், 33 சதவீத வாக்குகளுடன் அதிமுக கூட்டணி ஒரே ஒரு தொகுதியிலும் வெற்றுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தவெக 15% வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் தெரியவந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியை விட திமுக தலைமையிலான கூட்டணி 12% அதிக வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் இந்தியா டுடே- சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு என்பதால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பதும் தெரியவந்துள்ளது.