“அதிமுகவில் இருக்க பிடிக்காததால் அங்கிருப்பவர்கள் வெளியேறுகின்றனர்"- இசக்கி சுப்பையா
May 26, 2026, 15:56 IST
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா, தவெகவில் இணைவதற்காக அக்கட்சியின் தலைமை அலுவலகம் சென்றடைந்தார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா, “அதிமுகவில் இருக்க பிடிக்காததால் அங்கிருப்பவர்கள் வெளியேறுகின்றனர். தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதற்கு இதுவே காரணம். த.வெ.க நல்லாட்சி தரும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் காரணமாகவே அக்கட்சியில் இணைகிறோம். நாங்கள் என்ன படிக்காதவர்களா? அறிவில்லாதவர்களா? சுயமாகத்தான் சிந்தித்து முடிவெடுத்து இருக்கிறோம்.எனக்கு வாக்களித்த அம்பாசமுத்திரம் மக்களின் நன்மைக்காகத்தான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என்றார்.