×

இபிஎஸ்-சின் அதிரடி மூவ்..! அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம்!

 

அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பா K. பழனிசாமி தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு, மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மற்றும் வேலூர் மாநகர் மற்றும் புறநகர் நிர்வாகிகளுடனும், சனிக்கிழமை திருவண்ணாமலை வடக்கு, மத்தி, தெற்கு மற்றும் கிழக்கு மற்றும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில், நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்தும், கழகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/oCFKCWPmOg

— AIADMK (@AIADMKOfficial) June 30, 2026