×

திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்க வேண்டும் - ஈபிஎஸ்

 

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில்  5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டு 18 மணி நேரம் ஆகியும் மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன.