இபிஎஸ் ஷாக்..! திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் பெண் அமைச்சர்..!
திருப்பத்தூரில் திமுக வடக்கு மண்டல பூத் ஏஜென்ட் பயிற்சி மாநாடு நேற்று (14-02-26) மாலை நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் ஜோலார்பேட்டை சென்ற முதல்வருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டார். இதையடுத்து மாநாட்டு மேடைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
அப்போது முன்னாள் அதிமுக பெண் அமைச்சரான நிலோஃபர் கபில், முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மாநாடு நடைபெறுவதற்கு முன்பு திமுக மாநாடு திடலுக்கு திமுக பேட்ஜ அணிந்து நிலேஃபர் கபில் வந்தார். அதனை தொடர்ந்து அவர் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுகவில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற நிலோஃபர் கபில், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதிமுகவில் கட்சி செயல்பாடுகளில் தீவிரம் காட்டாமல் இருந்த நிலோஃபர் கபில் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.