இபிஎஸ் ஷாக்..! தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன்..!
Feb 18, 2026, 10:43 IST
அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் தவெகவில் இணைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நம்பம்பட்டியைச் சேர்ந்தவர் என்.சுப்பிரமணியன் (57).
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான இவர் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு அளித்திருந்தார். நேர்காண லிலும் பங்கேற்றார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் அதிமுகவில் இருந்து விலகி, விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
வெகவில் இணைந்தார். தவெகவில் இணைந்த ந.சுப்பிரமணியனுக்கு விஜய் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் அவருக்கு உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார். அதிமுகவில் 2006-2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-2016 வரை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும் ந.சுப்ரமணியன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது