இபிஎஸ் ஷாக்..! அதிமுக நகர செயலாளர் பசுபதி திடீர் ராஜினாமா..!
விழுப்புரம் அதிமுகவில் முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் அதிமுகவினுடைய மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகத்திற்கு எதிராக அதிமுகவின் விழுப்புரம் தெற்கு நகர செயலாளர் பசுபதி எதிராக போர்க்கொடி கூட்டி தனது ஆதரவுகளுடன் தனியாக ஒரு கூட்டத்தை நடத்தி வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வந்து விழுப்புரம் தொகுதிக்கு சி.வி. சண்முகத்தின் ஆதரவாளரான தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் பாபு என்பவர் பெயரை பரிந்துரைத்ததாகவும, கட்சி நிர்வாகி கூட்டத்திலேயே இவர் தான் வேட்பாளர் என்று அறிவித்ததாக கூறப்படுகிறது. இப்போது விழுப்புரம் நகர தெற்கு நகர செயலாளர் வந்து பசுபதி தான் அந்த சீட்டுக்கு எதிர்பார்த்து இருந்தார். அதனால் இவருக்கு சீட்டு இல்லை என்ற உடனே தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை செய்துள்ளார்.
உடையாள் சமூகத்தை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. பசுபதி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். இதனால் தனக்கு சீட்டு கிடைக்காத விரக்தியில் பசுபதி சி.வி.சண்முகத்திற்கு எதிராக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அதிமுக நகர செயலாளர் பசுபதி தலைமையிலான கூட்டத்தில் அவருடைய ஆதரவாளர்கள் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய கருத்தை வந்து தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய பசுபதி, இந்த மாவட்டத்தை இரண்டாக பிரிக்க விடாமல் இருப்பதற்கு காரணமே சி.வி.சண்முகம் தான்.அவர் மட்டுமே எம்எல்ஏவாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். மற்றவர்கள் யாரும் அதிமுகவில் எம்எல்ஏ வரக்கூடாது என்று திட்டமிட்டே செயல்படுகிறார். குறிப்பாக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சி.வி.சண்முகம், மாநிலங்களவை நிதியைக் கூட பாத்தீங்கன்னா மயிலம் தொகுதிக்கு மட்டுமே அதிக அளவு பணத்தை வந்து செலவிட்டுள்ளார். மேலும் மற்ற வெளி மாவட்டங்களுக்கு கூட செலவிட்டார். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தின் தலைமை இடமான விழுப்புரம் தொகுதியில் ஒரு பைசா கூட அவருடைய நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யவில்லை.அந்த அளவுக்கு கட்சிக்குள்ளேயே பாராமுகமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தான் மட்டுமே மாவட்ட செயலாளராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் விழுப்புரத்தை இரண்டாக பிரிக்கவிடாமல் இருக்கிறார் என சரமாரியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறு அதிமுக நிர்வாகியே சி.வி.சண்முகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் தெற்கு நகர செயலாளராக பதவி வகித்து வருபவரே பசுபதி. முன்னதாக, சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராகவும் இவர் நின்றிருக்கின்றார்.
இந்த நிலையிலேயே அவர் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது சிவி சண்முகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றார்.தொடர்ந்து, "சிவி சண்முகம் தனது பினாமிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், கட்சிக்காக உழைக்கும் நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது" எனவும் பசுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் தேர்தலில் சீட்டு விவகாரத்தில் சி.வி.சண்முகம் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விழுப்புரம் அதிமுக நகர செயலாளர் பசுபதி, தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். கட்சி பொறுப்பையும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். என்னை தொடர்ந்து அவமானப்படுத்துவதால் மன உளைச்சலில் இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.