தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்
Dec 28, 2024, 13:00 IST
தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவர் கேப்டன் விஜயகாந்த் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
தேமுதிக நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு 28ம் தேதி உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதேபோல் தலைவர்கள் பலரும் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.