×

இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரச்சாரம் செய்ய இபிஎஸ் அழைப்பு..!

 

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது... 

“எதன் மூலம் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதோ அதே வழிமுறையை நாமும் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் டிஜிட்டல் தளங்களில் கட்சியின் கருத்துகளை தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் கூறினார்.

”சமூக வலைதலங்களை சரியாக கையாளாததே நமது தோல்விக்கு காரணம். சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு கடைசி 3 நாட்களில்தான் நாம் வெற்றியை எழந்துள்ளோம். எதன் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெல்ல வேண்டும். சமூக வலைதள செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தவெகவின் வெற்றி நிலையது அல்ல. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம். தவெக நமக்கு எதிரி அல்ல திமுகதான் நமக்கு உண்மையான எதிரி."

இவ்வாறு அவர் கூறினார்.