×

“திமுகவை நம்பினால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும்”- தமிழிசைக்கு வாக்கு கேட்டு இபிஎஸ் பிரச்சாரம்

 

மயிலாப்பூர் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார். பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.

பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் ஆட்சியில், அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அதிகார மையங்களாக உள்ளனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஸ்டாலின் மருமகன் சபரீசன், ஸ்டாலின் மனைவி துர்கா ஆகிய 4 பேர் அதிகார மையங்களாக தமிழகத்தை ஆட்டிப்படைக்கின்றனர். இந்த 4 அதிகார மையங்களுக்கும் முடிவு கட்டுகிற தேர்தல்தான் வரும் சட்டப்பேரவை தேர்தல். திமுக ஒரு குடும்ப கட்சி, வாரிசு அரசியல் செய்கிறது. மக்களுக்காக செயல்படுவது அதிமுக. அதிமுக கொண்டுவந்த திட்டங்களைதான் திமுக திறந்து வைத்தது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியைவிட அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு அதிக இடங்களை திமுக கொடுத்துள்ளது. திமுகவை நம்பினால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும். வருவாயே இல்லாத கால கட்டத்திலும் சிறப்பான ஆட்சியை கொடுத்தது அதிமுக.. மாணவர்களின் கவலையையும் போக்கியது அதிமுக ஆட்சி. கொள்ளை அடிப்பது மட்டுமே திமுகவின் குறிக்கோள்” என்றார்.