×

பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க ரூ.25,000 மானியம் - இபிஎஸ் அறிவிப்பு..!

 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சேலம் ஓமலூரில் இன்று பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பட்டியலின மக்களுக்கு நிலத்துடன் கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்.

125 நாள் வேலைத்திட்டம் அதிமுக ஆட்சிக்கு வந்தபின் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றார். அதோடு, கல்விக்கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.100? என்ன ஆனது என்று திமுக அரசை கேள்வியெழுப்பினார்.