×

இபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே வாகனத்தில் பிரச்சாரம்..!!

 

தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் சேர்ந்து ஒரே வாகனத்தில் பிரச்சாரம் செய்தனர்.

அப்போது தொண்டர்கள் ராட்சத மாலை அணிவித்து கொண்டாடினர்.

அப்போது பேசிய டிடிவி தினகரன், நானும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ஒரே வேனில் நின்று பிரச்சாரம் செய்வதால் சில பேர் பயத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

அவர்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள், இது அண்ணன் தம்பி சண்டை தான். என்றார் இருவரும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.