பக்ரீத் நாளன்று நுழைவுத் தேர்வு- ஜவாஹிருல்லா கண்டனம்
தியாகத் திருநாள் அன்று நடைபெறவிருக்கும் தேசிய தடய அறிவியல் தேர்வு நாள் மாற்றப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (National Forensic Science University) இந்தியா முழுவதும் உள்ள தனது அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஒருங்கிணைந்தஇளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை வருகிற சனிக்கிழமை (தியாகத்திருநாள் -பக்ரீத் ) அன்று நடத்துவதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிகளிலிருந்து மட்டும் 1800க்கும்மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். அதில் பல முஸ்லிம்மாணவ, மாணவிகளும் தமிழ்நாடு அரசின் நிதி உதவியின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். தியாகத் திருநாள் அன்று இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது முறையல்ல. இந்த நுழைவுத் தேர்வை நடத்தும் National Forensic Science University, Gandhi Nagar, Gujarat (Nodel Authority) க்கு என்னுடைய வன்மையான கண்டனம். தேர்வு தேதியை உடனடியாக மாற்றக் கோருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.