×

60 ஆண்டுகளுக்குப் பின் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்த இங்கிலாந்து: அர்ஜென்டினா அபார வெற்றி!

 

உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் ஆரம்பம் முதல் இரு அணிகளும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டியது. இரு அணிகளும் அபாரமான தற்காப்பு ஆட்டத்தை கையாண்டது. இதனால் முதல் பாதி சமனில் முடிந்தது. பின்னர் இரண்டாம் பாதி தொடங்கியவுடன் அர்ஜென்டினாவின் ரொமேரோவிற்கு எல்லோ கார்டு வழங்கப்பட்டது.

தொடர்ந்து இங்கிலாந்து வீரர் ஆண்டனி கோர்டன், மோர்கன் ரோஜர்ஸ் உதவியுடன் முதல் கோல் அடித்தார். இதற்கு அர்ஜென்டினா பதிலடி கொடுக்க முயன்ற நிலையில், இங்கிலாந்து அணி அசாத்தியமான டிஃபன்ஸ் (defence) ஆட்டத்தை கையாண்டது. ஆனால் 70வது நிமிடத்திற்கு பிறகு ஆட்டம் அர்ஜென்டினா பக்கம் திரும்பியது. 85வது நிமிடத்தில் அந்த அணியின் என்சோ பெர்னாண்டஸ் மெஸ்ஸியின் பாஸ் மூலம் முதல் கோல் அடித்தார்

.பின்னர் கூடுதல் நேரத்த்தில் மீண்டும் மெஸ்ஸியின் அபாரமான பாஸ் மூலம் லாவ்டரோ மார்டினேஸ் இரண்டாவது கோல் அடித்தார். இதன்மூலம் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி கடைசி நேரத்தில் மோசமான டிஃபன்ஸ் ஆட்டத்தால் இறுதிப் போட்டி வாய்ப்பை நழுவவிட்டது. இங்கிலாந்து அணி 60 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது.

அர்ஜென்டினா அணி உலகக் கோப்பை வரலாற்றில் 7வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 19ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வரும் 19ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.