ஜூலை 1ஆம் தேதி இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை – 2026க்கான தரவரிசைப் பட்டியல் 01.07.2026 அன்று வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “CBSE-யின் மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் 21.06.2026 அன்று வெளிவந்த நிலையில் 29.06.2026-யில் வெளியிட இருந்த தரவரிசைப் பட்டியல் 01.07.2026 அன்று வெளியிடப்படும். மேலும், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு (Counselling) தேதிகளும் அன்று அறிவிக்கப்படும். வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருப்பின், அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு (Grievance Redressal) காலம் 01.07.2026 முதல் 05.07.2026 வரை வழங்கப்படும். இந்தக் காலகட்டத்தில் மாணாக்கர்கள் தங்களுக்குரிய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்களை (TFCs) நேரில் அனுகலாம் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.