×

#JUSTIN ஜூலை 2ல் பொறியியல் கலந்தாய்வு

 

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 5ம் தேதி தொடங்கியது. மாணவ மாணவியர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வத்துடன் விண்ணப்பித்து வரும் நிலையில் கடந்த 17ஆம் தேதியுடன் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 339 மாணவர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் 90,471 பேர் பதிவு கட்டணத்தை செலுத்தினர். அத்துடன் 5086 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 4-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கும்.  பாலிடெக்னிக் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம். பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 3ம் தேதி தொடங்கும் என்று கூறியுள்ளார். சிபிஎஸ்இ , மாநிலக் கல்வி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூலை 2ம் தேதி என மாற்றப்பட்டுள்ளது.