வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர் குடியிருப்பில் அமலாக்கத்துறை ரெய்டு
வேலூர் தனியார் மருத்துவமனையில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.
வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துமனைக்கு (CMC) சொந்தமான தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள மருத்துவர்கள் தங்கும் விடுதியில் இன்று காலை 7.30 மணி முதல் 7-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையினர் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் உதவியோடு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை சோதனை தொடர்கிறது.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், தற்போது தங்கும் விடுதியில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கும் மருத்துவமனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஒரு பணியாளருக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் மட்டும் சோதனை நடத்தப்படுகிறது. CMC மருத்துவமனை தொடர்பாக பரவி வரும் தகவல் தவறானது என மருத்துவமனை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெல்கிங் என்ற மருத்துவமரின் அறையில் சோதனை நடைபெறுவதாகவும் அவர் தற்போது ஊரில் இல்லாததால் அவரை வரவழைத்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.