செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தர அமலாக்கத்துறை எதிர்ப்பு
Feb 14, 2024, 13:52 IST
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் இந்த ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; செந்தில் பாலாஜி வேண்டுமென்றே வழக்கு விசாரணையை தாமதப்படுத்த நினைக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு பதிலாக, வழக்கு விசாரணையை துரிதப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் .
காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து தொடர்ச்சியாக ஜாமின் மனு தாக்கல் செய்ய முடியாது என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில் ஜாமின் கொடுத்தால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.