காலையிலேயே என்கவுண்டர்.. தமிழகத்தில் அதிர்ச்சி..!!
Aug 26, 2026, 10:27 IST
பிரபல ரவுடி கோபியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கடந்த 16ம் தேதி இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே மோதலில் நரேஷ் என்பவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், நெய்வேலி புலவன்குப்பத்தில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி கோபியை பிடிக்க முயன்றனர். அப்போது, ரவுடி கோபி போலீசாரிடம் இருந்து தப்பிக்க, அரிவாளால் தாக்குதல் நடத்த முயன்றார்.
இதனால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பிரபல ரவுடி கோபியின் காலில் குண்டு பாய்ந்தது. அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.
அதேபோல, அரிவாள் வெட்டில் காயமடைந்த போலீஸ்காரர்கள் பாண்டிய ராஜன், விஜயலசோழன் ஆகியோர் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.