×

மதுரையில் ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை கொண்டாடிய ஊழியர்கள்

 

மதுரையில் ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை கொண்டாடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஏரோ டான் நிறுவனம் மற்றும் மை பிளை ஸ்கை நிறுவனம் மூலம் வரும் 24ம் தேதி வரை 4 நாட்களுக்கு மதுரையை ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். இச்சேவையானது விமான நிலையம் பின்புறம் நான்கு வழிச்சாலையில் சின்ன உடைப்பு அருகே உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இருந்து இந்த வான்வழி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் செயல்படுத்த ஹெலிகாப்டர் ஆந்திர மாநிலம் கர்நூலிலிருந்து இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.