×

ஊழியர்கள் ஷாக்..! 4,800 பேரை பணிநீக்கம் செய்ய போவதாக மைக்ரோசாப்ட் அறிவிப்பு..! 

 

மெட்டா நிறுவனம் சமீபத்தில் 8 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்திருந்தது. அமேசான் நிறுவனமும் ஆட் குறைப்பில் ஈடுபட்டது.மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்த ஆண்டு துவக்கத்தில் 9 ஆயிரம் பேர் தாமாக முன்வந்து பணியில் இருந்து ஆகும் விலகும் வாய்ப்பை வழங்கி இருந்தது.

தற்போது, இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்த நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. 2022ம் ஆண்டுக்கு பிறகு அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட மோசமான சரிவாக இது உள்ளது.

தற்போதைய நவீன காலத்தில் ஏஐ பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்ப மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. ஏஐயில் அதிக முதலீடுகளை செய்து வருவதால் செலவுகளும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் செலவுகளை கட்டுப்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது.

அதாவது உலகம் முழுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறதாம். அதாவது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த பணியாளர்களில் 2.1 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறதாம். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மீண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்து இருப்பது அங்கு பணிபுரியும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.