×

ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை நொடியில் மீட்ட ஊழியர்

 

நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் படுத்து கிடந்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை ரயில்வே கி மேன் புத்தி சொல்லி மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

உடனடியாக ரயில்வே கீ மேன் மீனாட்சி சுந்தரம் தற்கொலை செய்து கொள்வது தீர்வல்ல என்பது குறித்து எல்லாம் அறிவுரை கூறி முதியவரை மீட்டு அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் ஒப்படைத்திருக்கிறார். காலையிலேயே தண்டவாளத்தில் ஆய்வு பணிக்குச் சென்ற ரயில்வே கி மேன் தற்கொலைக்கு முயன்ற முதியவரை மீட்ட சம்பவம் நெல்லையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.