ராணிப்பேட்டை வேதி ஆலை விபத்தில் பணியாளர் படுகாயம்: தொழிலாளிக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்!
Dec 19, 2023, 11:50 IST
இராணிப்பேட்டை வேதி ஆலை விபத்தில் பணியாளர் படுகாயமடைந்துள்ள நிலையில் நிறுவனம் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் எஸ் -3 என்ற வேதிப்பொருள் ஆலையில் வேதிப்பொருள் கொள்கலனை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் கடலூர் மாவட்டம் தியாகவள்ளியைச் சேர்ந்த பிரவீண் குமார் என்ற தொழிலாளி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். இந்த விபத்துக்கும், பிரவீண் குமாருக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் நிர்வாகத்தின் அலட்சியமும், போதுமான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததும் தான் காரணமாகும்.