×

பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா இன்று - தினகரன் ட்வீட் 

 

சுவரன் மாறன் என்றும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் என்றும் அழைக்கப்படும் பெரும்பிடுகு முத்தரையர் (705 கிபி -745 கிபி)  அவர் முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்தவர் . தஞ்சாவூர் , திருச்சி , புதுக்கோட்டை , பெரம்பலூர் , திருவாரூர் ஆகிய பகுதிகளை பல்லவ வம்சத்தின் நிலப்பிரபுவாக ஆட்சி செய்தார் . அவர் இரண்டாம் நந்திவர்மனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டார். முத்தரையர் பிறந்தநாள் விழாவை ஆண்டுதோறும் அனைத்து மக்களும், உள்ளூர் அரசியல்வாதிகளும் கொண்டாடி வருகின்றனர். திருச்சியில் அவரது நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , தமிழ்நாட்டின் மத்திய பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்களில் முத்தரையர்கள் வம்ச வழி வந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா இன்று. 

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் கொடை வள்ளலாகத் திகழ்ந்ததோடு மட்டுமின்றி போர் களத்தில் 14 முறை எதிரிகளை வீழ்த்தி  வெற்றி கண்டவர். இரண்டு முறை பல்லவ  மன்னர்களின் வெற்றிக்கு துணைநின்று பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்.



பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்த நாளான இன்று அவரது வழியில் மக்களுக்காக ஜனநாயகக் கடமை ஆற்றுவோம் என உறுதி ஏற்போம்."என்று குறிப்பிட்டுள்ளார் .