இமானுவேல் சேகரன் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும்: உதயநிதி பேட்டி..!
Sep 12, 2025, 11:01 IST
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
இமானுவேல் சேகரன் 68 வது நினைவு நாளில் முதல்வர் அறிவுரைப்படி நானும், மூத்த அமைச்சர்களும் மரியாதை செலுத்தினோம். சமூக நீதிக்காக பாடுபட்ட இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே ரூ. 3 கோடி நிதி ஒதுக்கினோம். அதற்கான பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டன.
விரைவில் முழு பணிகளும் முடிந்து திறந்து வைக்க இருக்கிறோம். பா.ஜ., கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., வந்து விட்டதாக நீங்கள் கூறினீர்களே என கேட்ட போது, இங்கு அஞ்சலி செலுத்த வந்தேன். அரசியல் பேச விரும்பவில்லை என்றார்.