☰
×

MLA-வாக பதவியேற்ற கையோடு மரகதம் குமரவேல் சொன்ன வார்த்தை..!!

 

தவெக எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் பேசுகையில்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் எனக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளனர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி இந்த இடை தேர்தலில் எவ்வளவோ பொய் பிரச்சாரங்களை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் செய்துள்ளனர். அதேபோல் நாங்கள் பதவியை ராஜினாமா செய்த நான்கு மாத காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர். குறிப்பாக தனிமனித தாக்குதலை நடத்தினர். இந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் என் மீது எவ்வளவு விமர்சனம் செய்தும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மக்கள், என் மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் நம்பிக்கை வைத்து என்னை வெற்றி பெற செய்துள்ளனர்.

எவ்வளவு மக்கள் பொய் பிரச்சாரம் செய்தாலும் அது எடுபடவில்லை. கட்சியின் கொள்கைக்கு முரணாக திமுகவும் அதிமுகவும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டம் போட்டதன் காரணமாகத்தான் நாங்கள் எங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து வெளியே வந்தோம் என்று மக்களிடத்தில் தெளிவாக எடுத்துரைத்தேன் என்று கூறினார். தொடர்ந்து பேசிய மரகதம் குமரவேல், இடைத்தேர்தலுக்காக 20 நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஒரு பெண் என்று பாராமல் எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு இழிவு படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

எங்களுக்கும் ஒரு குடும்பம் உள்ளது என்பதை அவர்கள் நினைக்கவில்லை. புரட்சி தலைவி அம்மா இருந்திருந்தால் எங்களுக்கு இது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்காது அந்த அளவிற்கு திமுகவும் அதிமுகவும் சேர்ந்து எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள். ஆனால் தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் இரண்டு நாட்கள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு ஆதரவாக களம் இறங்கினர் அவரின் முகத்திற்காகவே நாங்கள் இங்கு பெற்றுள்ளோம்.

மேலும் மதுராந்தகத் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும் செய்து கொடுப்போம் என்று உறுதி அளிக்கிறேன். குறிப்பாக மதுராந்தக தொகுதி வளர்ச்சிக்காகவும் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். ஏற்கனவே பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய் மதுராந்தம் தொகுதிக்கு தேவையான அனைத்து வித வசதிகளையும் செய்து தருவேன் என்று கூறியிருக்கிறார் அதனை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்று கூறினார்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் JCD பிரபாகர்,அமைச்சர்கள் செங்கோட்டையன், என்.ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்டோர் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர்.