×

வைரலாகும் E-mail : காதலியுடன் நேரம் செலவிட விடுமுறை கேட்ட ஊழியருக்கு மேலதிகாரி சொன்ன பதில்.. 

 

வேலை நிமித்தமான அழுத்தங்களுக்கு மத்தியில், ஊழியர் ஒருவரின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து மேலதிகாரி விடுமுறை வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக அலுவலகங்களில் விடுமுறை கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் சூழலில், இந்தச் சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த ஊழியர் தனது மேலதிகாரிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் மிகவும் வெளிப்படையாகத் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார். "எனது காதலி வெளியூர் செல்கிறார். அவர் மீண்டும் திரும்புவதற்கு ஒரு மாத காலம் ஆகும் என்பதால், நாளை ஒருநாள் அவருடன் நேரம் செலவிட விரும்புகிறேன். தயவுசெய்து எனக்கு விடுமுறை அளிக்க வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இது போன்ற காரணங்களைக் கூறினால் மேலதிகாரிகள் கோபப்படுவார்கள் அல்லது நிராகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும். ஆனால், இந்த மேலதிகாரியோ ஊழியரின் நேர்மையைக் கண்டு வியந்துள்ளார். பொய்யான காரணங்களைச் சொல்லாமல் உண்மையைப் பகிர்ந்த ஊழியரின் குணத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

இதற்குப் பதிலளித்த மேலதிகாரி, "காதலுக்கு என்னால் 'நோ' (No) சொல்ல முடியாது. உங்களின் இந்த நேர்மையான அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நாளை ஒருநாள் மகிழ்ச்சியாகச் செலவிடுங்கள்" எனக் கூறி உடனடியாக விடுமுறையை அனுமதித்துள்ளார். இந்த மனிதாபிமானமிக்க செயல் இணையவாசிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.