×

பொள்ளாச்சியில் 5 ஆண்டுகளுக்கு பின் களைகட்டிய ’யானை பொங்கல்’

 

பொள்ளாச்சியில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 'யானை பொங்கல்’ கொண்டாடப்பட்டது.


தமிழகம் எங்கும் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவதை அடுத்து யானைகள் முகாம்களில் இன்று யானை பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் கோழி கமுத்தி யானைகள் முகாமில் இன்று யானை பொங்கல் கொண்டாடப்பட்டது.இந்த முகாமில் 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானை பொங்கல் தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு மீண்டும் டாப்ஸ்லிப்u கோழி கமுத்தி யானைகள் முகாமில் இன்று கொண்டாடப்பட்டது. யானைகளுக்காக பொங்கல் வைக்கப்பட்டு, பழம், காய்கறிகள் உள்ளிட்டவை யானைகளுக்கு வழங்கப்பட்டது.இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.