×

கோவையில் வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடம்!

கோவை: வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதற்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழக-கேரள எல்லைப்பகுதியான கோவை ஆனைக்கட்டிக்கு முன்பு உள்ள ஜம்புகண்டி அருகே வனத்தை ஒட்டிய விவசாய நிலத்தில் 12வயது மதிக்கத்தக்க ஆண் யானை வாயில் காயத்துடன் இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் மற்றும் மருத்துவர் சுகுமார் பழங்களில் மருந்து வைத்து யானைக்கு சிகிச்சை அளித்துவந்தனர். யானையும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வந்த நிலையில், இன்று வனத்தை ஒட்டிய அகழி
 

கோவை: வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதற்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக-கேரள எல்லைப்பகுதியான கோவை ஆனைக்கட்டிக்கு முன்பு உள்ள ஜம்புகண்டி அருகே வனத்தை ஒட்டிய விவசாய நிலத்தில் 12வயது மதிக்கத்தக்க ஆண் யானை வாயில் காயத்துடன் இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் மற்றும் மருத்துவர் சுகுமார் பழங்களில் மருந்து வைத்து யானைக்கு சிகிச்சை அளித்துவந்தனர்.

யானையும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வந்த நிலையில், இன்று வனத்தை ஒட்டிய அகழி அருகே யானை படுத்துவிட்டதால், அதற்கு 25 பாட்டிகள் குளுகோஸ், இரும்பு சத்திற்கான மருந்து ஆகியவை வழங்கப்பட்டது. இருப்பினும், யானை படுத்தே இருப்பதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.