மின் கட்டணம் உயர்வு- நடிகை குற்றச்சாட்டுக்கு TANGEDCO விளக்கம்
மின் கட்டணம் உயர்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் விரிவான விளக்கம் அளித்துள்ளது.
2-3 மாதங்களாக சாமானிய மக்களுக்கு மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது, எனக்கும் இதே நிலைமைதான் என நடிகை வைஷாலி வீடியோ வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் விரிவான விளக்கம் அளித்துள்ளது.
இது என்ன புதுசா வந்திருக்கிற Paid “Toolkit-ஆ?” தமிழ்நாடு EB துறைக்கு எதிராக இப்படிப்பட்ட ஆதாரமற்ற Reels-ஐ பதிவிட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
— D E V I L (@DEVILya9) August 12, 2026
மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். உண்மையிலேயே இவருடைய மின்சாரக் கட்டணம்… pic.twitter.com/2PIEvPJhfT

மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கோடை வெயில் நீடித்ததால் மின் பயன்பாடு அதிகரித்ததே கட்டணம் உயர முக்கிய காரணம். மாநிலம் முழுவதும் சிறப்பு ஆய்வில் இதுவரை 3.43 லட்சம் இணைப்புகள் பரிசோதிக்கப்பட்டதில், 0.75% மட்டுமே மீட்டர் வாசிப்பு மற்றும் கணக்கீட்டுத் தவறுகள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளன. 200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் நுகர்வோர்களும் எவ்வித கட்டணமுமின்றி இலவச மின்சாரத்தை பெற்று பயனடைந்துள்ளனர். ஜூலை வரை நீடித்த கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே மின் பயன்பாடு அதிகரித்துள்ளதே தவிர, கட்டண உயர்வு வதந்திகளை நம்ப வேண்டாம். கட்டணத்தில் சந்தேகம் இருப்பின் 9498794987 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது எக்ஸ் தளம் மூலம் தொடர்பு கொண்டு உடனடியாகத் தீர்வு காணலாம்.