×

தனியாருக்கு தாரைவார்க்கப்படும் மின்வாரியம்?

 

மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் த.வெ.க அரசின் கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாட்டிற்கு மின்ஊழியர் மத்திய அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மின்வாரியத்தைதனியாருக்கு தாரை வார்க்கும் தவெக அரசின் கார்ப்பரேட் ஆதரவு நிலைபாட்டிற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் தற்போதுள்ள 5x210 மெகாவாட் மின்நிலையத்தை அகற்றிவிட்டு, அங்கு 2x800 மெகாவாட் மின்திறன் கொண்ட சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையத்தை ரூ.20,800 கோடி முதலீட்டில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மின்சார வாரியம் தனியார்மயம் ஆவதை நோக்கி வேகமாகச் செல்கிறது என்பதை உணர்த்துவதாக தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் தி.ஜெயசங்கர் கூறியுள்ளார். இதேபோல் எண்ணூர் அனல்மின் நிலையங்களை ppp முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முதலமைச்சரின் அறிவிப்புக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தனியாரிடம் வழங்கும் தவெக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மின்வாரியத்தில் 10,000 பேரை 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே எடுப்பதா எனக் கேள்வி எழுப்பியுள்ள தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் தி.ஜெயசங்கர், புதிய புனல் மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களையும்தனியாருக்கு விற்கும் தவெக அரசின் நிர்வாக திறமையின்மை அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.