×

விதிகளைப் பின்பற்றிய மின் கட்டணம் வசூல்! – வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

ஊரடங்கு காலத்தில் மின்சார கட்டணம் கணக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளது என்று என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வீடு வீடாக சென்று மின்சார கணக்கீடு செய்ய முடியவில்லை. இதனால் முந்தைய மாத கட்டணத்தையே செலுத்த மின்சார வாரியம் அறிவுறுத்தியது. அதற்கு அடுத்த மாதம் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் குளறுபடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. பலருக்கும் பல ஆயிரம் ரூபாய் வித்தியாசம் வந்தது. வழக்கமாக ஏப்ரல்,
 

ஊரடங்கு காலத்தில் மின்சார கட்டணம் கணக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளது என்று என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வீடு வீடாக சென்று மின்சார கணக்கீடு செய்ய முடியவில்லை.

இதனால் முந்தைய மாத கட்டணத்தையே செலுத்த மின்சார வாரியம் அறிவுறுத்தியது. அதற்கு அடுத்த மாதம் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் குளறுபடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. பலருக்கும் பல ஆயிரம் ரூபாய் வித்தியாசம் வந்தது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வசூலிப்பதை விட அதிகமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.


மின்சார கட்டணம் கணக்கீட்டில் குளறுபடி உள்ளது என்றும், பயன்படுத்தப்பட்ட யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட வேண்டும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “ஊரடங்கு காலத்தில் மின் கட்டண கணக்கீட்டு முறையை எதிர்த்த வழக்கைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. விதிகளை பின்பற்றியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று இந்த உத்தரவை பிறப்பிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.