×

தேர்தல் 2026 - துணை தேர்தல் ஆணையர் பிப், 11இல் தமிழ்நாடு வருகை

 

துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வரவுள்ளார்.


தமிழக சட்டப்பேரவை தேர்தல், மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான அறிவிப்பை, பிப்ரவரி இறுதியில், தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைககளின் துவக்கமாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி முடிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல், வரும் 17ல் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளனர்.அப்போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழக பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன், மாவட்ட ஆட்சியர்களுடன் உள்ளிட்டோருடன் ஆலோசிக்க உள்ளனர்.இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு தமிழகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது