#BREAKING மாலை 5 மணி நிலவரம் - 2021 தேர்தல் வாக்குப்பதிவைவிட 19.18% அதிகம்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் 5 மணி நிலவரப்படி, 82.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56% ஓட்டுப்பதிவாகி இருந்தது. பிறகு மதியம் 1 மணி நிலவரப்படி, ஓட்டுப்பதிவு 56.81 சதவீதமாக அதிகரித்தது.இந்த ஓட்டுப்பதிவு சதவீதம் மதியம் 3 மணிக்கு 70 சதவீதமாக உயர்ந்தது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 82.24 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கரூர் மாவட்டம் 89.32%, குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் - 73.44% பேர் வாக்களித்துள்ளனர். இதுவரை 4.71 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது 2021 தேர்தல் வாக்குப்பதிவைவிட 19.18% அதிகமாகும்.