×

அதிமுகவிலும் தேர்தல் அறிக்கை குழு நியமனம்!

 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பொன்னையன், ஜெயக்குமார்,  ந‌த்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி அடங்கிய  10 பேர் கொண்ட குழுவை நியமித்தார் ஈபிஎஸ்.


தமிழ் நாட்டில் 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மக்களுக்கு பல்வேறு வகைகளில் நலம் பயக்கும் வகையிலான தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக, கட்சியின் சார்பில் பின்வருமாறு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகை செல்வன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேற்கண்ட குழுவினர் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துகளையும் கேட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.